நினைவு நாள் அஞ்சலி
பேரையூர் ஜமீன்தாரரும் , தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், வீரபாண்டிய கட்டபொம்மன் இதழின் முன்னாள் ஆசிரியரும், தன் வாழ்நாள் இறுதிவரை சமுதாய தொண்டாற்றியவருமான அமரர்.மு.பரதபாண்டியன் அவர்களின் நினைவுநாளான இன்று (15.04.2022)காலை 10.00 மணி அளவில் நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்திலுள்ள விடுதலைக்களம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் அன்னாரின் திருவூவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர செயலாளர் தங்கமணி, நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியூர் பூபதி, மோகனூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
செல்வந்தராய் பிறந்து சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை தொடர்ந்து இயக்க நிலையில் வைத்திருந்தவர் ஜமீன்தார் மு.பரதபாண்டியனார். அந்னாரின் நினைவுநாளில் அவரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் வென்றெடுக்க உறுதி ஏற்கபட்டது.
விடுதலைக்களம் கட்சி தலைமையகம்.