மேலூர் அருகே, அரசுக்கு சொந்தமான மரங்கள் முறைகேடாக வெட்டி கடத்தல் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

மதுரை ஏப்ரல் - 20


மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாசன கால்வாய்கள் மற்றும் சாலைகளின் ஓரங்களில் வேம்பு, புளி, நாவல், வாகை என ஏராளமான மரங்கள் உள்ள நிலையில் அவற்றை போதுபணித்துறையினர் கணக்கெடுத்து பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேலூர் அருகே தனியாமங்கலம் பகுதியில் உள்ள நாவல், வாகை, வேம்பு உள்ளிட்ட மரங்களை சிலர் சட்டவிரோதமாக வெட்டி கடத்தி வருகின்றனர். மேலும் மரம் கடத்தலில் ஈடுபடுவோர் உள்ளூர் பிரமுகர்களுக்கும் சிறப்பாக கவனித்து விடுவதால் மரம் வெட்டி கடத்தப்படுவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, கிராம நிர்வாக அதிகாரிகளோ கண்டுகொள்ளாததால் இப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்துவது வாடிக்கையாக ஆகிவிட்டதாக கூறும் விவசாயிகள் இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை