உலக புத்தக தினத்தில் அரசு பள்ளி மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு அடித்தளமிடும் இல்லம் தேடிக் கல்வி மையங்கள்.
புதுக்கோட்டை ஏப்ரல் – 24
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்களின் ஆலோசனையின்படியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர். சாமி. சத்தியமூர்த்தி அவர்களின் வழிகாட்டலின்படியும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் ஆடல் பாடல் விழாக்கள் கொண்டாட்டம் என சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கந்தர்வகோட்டை ஒன்றியம், நெப்புகை குடியிருப்பில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்டு,
தன்னார்வலர்கள் சித்ரலேகா, உமா மகேஸ்வரி, துர்கா தேவி ஆகியோர் மாணவர்களுக்கு பள்ளியின் நூலகத்திலிருந்து புத்தகங்களை பெற்று மாணவர்களுக்கு வாசித்தல் ஆர்வத்தையும் விழிப்புணர்வையும், ஏற்படுத்தியிருந்தனர். . அவர்களை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் இ.தங்கராசு மற்றும் அ.ரகமத்துல்லா ஆகியோர் பாராட்டியதுடன் தொடர்ந்து பல்வேறு புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தவர்களிடம் தாம் படித்த புத்தகத்திலிருந்து அறிந்து கொண்ட கருத்துகளை கூற கேட்டனர். மாணவர்கள் ஆர்வத்துடன் தாங்கள் படித்த புத்தகத்திலிருந்து கதைகளையும் கருத்துக்களையும் கூறினர். மாணவர்களுக்கு பாராட்டும் உற்சாகமும் அளிக்கப்பட்டது.
மேலும் மாணவர்களுக்கு தங்கள் ஊரில் உள்ள கிளை நூலகங்களை பயன்படுத்தி பல்வேறு உலக தலைவர்களை பற்றியும், அறிவியல் அறிஞர்களைப் பற்றியும், அரசியல் தலைவர்களையும், விடுதலை போராட்ட வீரர்களையும், சமூக சிந்தனை கொண்ட நூல்களை படிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.