கள்ளழகர் இறங்க தயாராக " வை " "கை" ஆறு
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக மதுரையை நோக்கி மக்கள் வெள்ளத்தில் நீந்தி வைகை நோக்கி சரியாக எட்டு மணி அளவில் கோவில் கோட்டை வாசலில் இருந்து கிளம்பினார் கள்ளழகர்.
இது எங்க ஊரு திருவிழா நீங்கள் எல்லாம் விருந்தாளிகள் என வந்தவர்களை வண்டியில் சென்றவர்களை கூட நிறுத்தி பாசத்தோடு உபசரித்து உணவு நீர்மோர் சகலமும் வழங்கி பண்பாட்டு திருவிழாவாக இதனை மாற்றியே காண்பித்து விட்டனர் பாசக்கார மதுரைக்காரர்கள்.
சாமி கண்டதும் பாதி சனங்க சாமியேறி ஆடுதே
சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து/ கூடுதே
உச்சி அழகர் பார்த்த கிறுக்கு உச்சந்தலையில் ஏறுதே!