Posts

இன்றைய (7/3/25 வெள்ளிக்கிழமை )நமது தினஜெயம் காலை நாளிதழ்

Image

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

Image
மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் விபரங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்ட போக்குவரத்து காவல்துறை மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளின் தொடர்ச்சியாக கோரிப்பாளையம் AV பாலம் நுழைவாயிலில் கட்டுமான பணி நடைபெற இருப்பதால் வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக கீழ்க்கண்டவாறு 28.02.2025 அன்று வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டமும் 01.03.2025 அன்று சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றமும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கோரிப்பாளையதிலிருந்து சிம்மக்கல் மற்றும் நெல்பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேவர்சிலையில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி சாலையில் சென்று புதிதாக கட்டுப்பட்டுள்ள இணைப்பு பாலம் வழியாக மீண்டும் AV பாலத்தை அடைந்து அண்ணாசிலை வழியாக செல்ல வேண்டும். கல்பாலம் சந்திப்பில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி வழியாக கோரிபாளையம் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. செல்ல எந்தவொரு  அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை வழியாக செல்லும் கனரக மற்றும் ...

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?

Image
மதுரை பிப்- மதுரை மதுரா கல்லூரியை ஒட்டிய சர்வீஸ் ரோட்டில் (மேயர் முத்து பாலம் கீழ்புரம்) பல ஆண்டுகளாக பழைய எடைக்குபோடும் கார்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளார்கள் கார்களுக்கு நடுவே ரோட்டில் நடந்து செல்வோர் சிறுநீர்கழித்தும் , கோழி கழிவுகளையும் குப்பைகளை கொட்டியும் அந்த சர்வீஸ் ரோட்டையே நாசபடுத்தி வருகின்றனர்  இந்த பாலம் கீழ்புரமாகதான் ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்து வாகனங்கள் பெரியார் நிலையத்தித்திற்கும் திருப்பரங்குன்றத்தில் இருந்து வரும் வாகனங்கள் சர்வீஸ்ரோடு வழியாக சுப்பிரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரத்தித்திற்கும் செல்ல வேண்டும்  மதுரா கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் படிக்கும் நூற்றுக்கனக்கான மாணவ, மாணவிகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற கிராமபுர பகுதிகளில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் வந்து இந்த வழியாகத்தான் நடந்து வர வேண்டும்  இச்செய்தியை எங்களது நமது தின ஜெயம் நாளிதழ் வெப் சேனல் மூலம் மாணவ, மாணவிகளிடம் நேர்காணல் எடுத்து அதை சிறப்பு செய்தியாக வெளியிட்டு இருந்தோம்  வீடியோ வெளியிட்டு ஒரு வாரம் ஆகியும் போக...

பாண்டி பஜார் RMS மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சி ?

Image
மதுரை ஜன- 30 பாண்டி பஜார் RMS மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் கழிவுநீர்  இரண்டு முறை மாநகராட்சி ஊழியர்கள் சிறிய வண்டியை வைத்து அடைப்பை எடுத்தார்கள் சரிவர வில்லை  பெரிய வண்டியை அனுப்பி சரி செய்தால் நல்லது  பஜாரில் இருக்கும் வியாபாரிகளும், கடைக்கு  வருகை தரும் வாடிக்கையாளர்களும் வேதனை படும் அளவிற்கு உள்ளது மேலும் இந்த வழியாகத்தான் மதுரை ரயில் நிலையத்திற்கு ஆயிரக் கானகான பயணிகளும் செல்கின்றனர் மதுரை மாநகராட்சி உடனே நடவடிக்கை எடுக்குமா?

மதுரை மாநகர் போதை தடுப்பு பிரிவு காவல்துறை சார்பில் கே.கே நகர் அருள் மலர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Image
மதுரை ஜன- 30 மதுரை கே.கே நகரில் உள்ள அருள்மலர் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியில் போதையில்லா தமிழகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாவட்ட போதை தடுப்பு பிரிவு காவல்துறை சார்பில் நடைபெற்றது மாணவர்கள் மத்தியில் பள்ளி ஆசிரியர்கள், காவல் துறை அதிகாரிகள் போதை பற்றிய ஆபத்தை பற்றி எடுத்துரைத்தார்கள்

ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் வேக தடையில் "வெள்ளை பெயிண்ட் அடித்த 80 வார்டு தோழர்கள்

Image
மதுரை ஜன-29 மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஸ்ரீ வீரமாகாளியம்மன் எதிரே வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேகதடையில் வெள்ளை பெயிண்ட் அடித்து மக்கள் சேவை செய்தனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு 2ம் பகுதி குழு 80வது வார்டு தோழர்கள்  பொதுமக்கள் பாராட்டு