மெலட்டூரில் திருமண வரம் அருளும் ஸ்ரீ சித்தி புத்தி ஸமேத தக்ஷிணாமூர்த்திவிநாயகர்


கோவிலின் வரலாறு மற்றும் உத்ஸவ விவரங்கள்: 

ஸ்ரீ ஞான புராணத்தில், ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப்பட்டிருக்கின்ற 108 கணபதி ஷ்தலங்களுள், 81வது ஸ்தலம் ஸ்ரீ சித்தி புத்தி ஸமேத அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி விநாயகர் திருக்கோயில், மெலட்டூர். தஞ்சாவூரிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அழகிய மெலட்டூர் கிராமம். இந்த கிராமத்தில், ''பாகவத மேளா'' கலையும் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருவதும் ஒரு சிறப்பு. 
இந்த கோவிலை பற்றிய சில குறிப்புகள்: 
இங்கு ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி விநாயகர் தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளார்.
இந்த கோவில் 3  பிரகாரங்களைக் கொண்டது.
மூலஸ்தானத்தை சுற்றிவரும் பிரகாரம்.
த்வஜ ஸ்தம்பத்தை சுற்றிவரும் பிரகாரம்.
கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ள பிரகாரம்.
இங்கு ஸ்ரீ சண்டீகேஸ்வரருக்கு தனிமண்டபம் உள்ளது.
அது போன்று , ஸ்ரீ பைரவருக்கும் தனிமண்டபம் உள்ளது.
தவிர, அலங்கார மண்டபம், வசந்த மண்டபம் ,யாகசாலை மற்றும் மடப்பள்ளியும் உள்ளது.
வீதியுலாவிற்க்கு என்றுள்ள, ஸ்ரீ நர்தன கணபதி மற்றும் சண்டிகேஸ்வரர் மிகவும் அழகுற காட்சியளிக்கிறன.
வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 10 நாட்கள் பிரமோத்சவம் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இந்த நாட்களில், ஸ்ரீ சித்தி புத்தி ஸமேத அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி விநாயகரின் வீதியுலா, பலவித வாகனங்களில் காலையும், மாலையும் நடைபெறும்.
தவிர 5 ஆம் திருநாளன்று இரவு ஓலைச் சப்பரத்தில், சுவாமி  வீதியுலா நடைபெறுகிறது.
அதே போன்று 9 ஆம் திருநாளன்று, மகா ரதத்தில் வடம் பிடித்து, ‘’திருத்தேர்’’ வீதியுலாவும் நடைபெறும். 
ஏழாவது நாள் திருநாளன்று, நடைபெறும் “திருக்கல்யாண” நிகழ்ச்சி மிக முக்கிய சிறப்பான ஒன்று. அன்றைய தினம், காலையில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி விநாயகருக்கு அம்பாள் ஸ்ரீ  சித்தி , புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெறும். இது தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க பல மாநிலங்களில் இருந்து பொது மக்களும், பக்த ஜனங்களும் தொடர்ந்து வருகை புரிகின்றனர்.
இந்த திருக்கல்யாணத்தன்று, திருமணம் ஆகாதவர்களும், திருமணம் காலதாமதமாகும் ஆண்களும், பெண்களும் வந்து, ஸ்ரீ சித்தி புத்தி ஸமேத அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி விநாயகரை தரிசித்து ''பிரார்த்தனை ன்"அபிஷேகம் செய்து, மலர்மாலையும், மஞ்சள் கயிறும் அனிந்து கொண்டால்,'' உடனே திருமணம் நிகழும் என்பது ஒரு ஐதிகம்.     
இது போன்ற பல பிரார்த்தனை திருமணங்கள், முன்பு கோவிலிலேயே நடைப்பெற்றுள்ளதாக வயதான கிராம வாசிகள் கூறுகின்றனர். இப்பொழுதும் 8 வருட காலமாக உத்ஸவமும், பல திருமணமும்  நடைபெற்று கொண்டிருக்கிறது. ‘’திருமணம் வரம் அருளும்’’ இந்த வினாயகர் ‘’விவாஹ வரமருளும் வினாயகர்’’ என்று அழைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறார்.
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதியன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 22 ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31 ம் தேதி வரை பிரமோத்சவம் நடைபெற உள்ளது. 
மேலும் விவரங்களுக்கு:-
 "Kalaimamani" S.Kumar (Melattur Bhagavatha Mela)
Hereditary Trustee & Managing Trustee. 
Mobile : +91 99943 67113 
E-Mail : sreesiddhibuddhi@gmail.com
Website : www.melatturvinayagar.com

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை